ஜப்பானில் நுழைய 11 நாடுகளுக்கு தடை

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கூடுதலாக 11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை விதித்துள்ளது.

இந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், அர்ஜெண்டினா, பங்களாதேஷ், எல் சால்வடார், கானா, கினியா, இந்தியா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய 11 நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன், தனது நாட்டு குடிமக்கள் இந்த 11 நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று ஜப்பான் அரசு அறிவுறுத்தியிருந்தது.

ஏற்கனவே ஜப்பானில் 188 நாடுகளை சேர்ந்த மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு, 16,581பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 830பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir