அமைச்சர் ஆறுமுகத்தின் உயிரிழப்பையடுத்து வைத்தியசாலையில் குவிந்த அரசியல்வாதிகள்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் நேற்றிரவு உயிரிழந்ததையடுத்து அவரின் சடலம் தலங்கம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்மார் உள்ளிட்ட அரசியல்வாதிகள் இன்றிரவு அங்கு படையெடுத்துள்ளனர். அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் அமைச்சர்களான மனோ கணேசன், ரவி கருணாநாயக்க, மஹிந்தானந்த அழுத்கமகே ஆகியோரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் அங்கு சென்றுள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பூதவுடல் அஞ்சலிக்காக நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என்று அரச தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

You May Also Like

About the Author: kalaikkathir