தென்னாசியாவை பொறுத்தவரை தமது நாட்டில் மாத்திரமே எரிபொருட்களின் விலை மிகவும் குறைந்த மட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக பாகிஸ்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பெற்றோலின் விலை 7 ரூபா 06 சதத்தாலும், மண்ணெண்ணெய் 11 ரூபா 88 சதத்தாலும் டீசல் 9 ரூபா 37 சதத்தாலும குறைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து பாகி;ஸ்தானில் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 74 ரூபா 52சதமாக விற்பனை செய்யப்படுகிறது.
மண்ணெண்ணெய் 35ரூபா 56சதமாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 38ரூபா 14 சதமாக விற்பனை செய்யப்படுகிறது.
இது இந்தியாவைக் காட்டிலும் இரண்டு மடங்கு குறைவான விலையாகும்.
பங்களாதேஸ், இலங்கை மற்றும் நேபாளத்தை காட்டிலும் 50 வீத குறைவான விலையாகும் என்று பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.