கொரோனா தாக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா-சீனா இடையே பனிப்போர் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரது எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் சீனாவில் இருந்து வரும் விமானங்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க அமெரிக்க அதிகாரிகள் மறுத்து வந்தனர். தற்போது சீன விமானங்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
சீன சிவில் ஏவியேஷன் ரெகுலேட்டர் அமைப்பு கடந்த வியாழனன்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடட் ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவை நிறுவனங்கள் இரு நாடுகளிடையே விமான போக்குவரத்தை தடை செய்தது.
மேலும் சீனா செல்லும் அமெரிக்க விமானங்களுக்கு அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை விதித்தது. பின்னர் டெல்டா மற்றும் யுனைடட் ஏர்லைன்ஸ் ஆகிய விமானங்கள் தங்களது சேவையைத் துவக்க முற்பட்டபோது சீன அரசு கட்டுப்பாடு, அதனை அனுமதிக்க மறுத்தது. அப்போது இரு நாடுகளிடையே குறைந்த அளவு விமான சேவையே இருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, சீனா சர்வதேச விமான சேவை கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியது. இதனால் விரைவில் சீன விமானங்களுக்கு தாங்களும் இதேபோல கட்டுப்பாடுகள் விதிக்கவிருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.
இதன்விளைவாக சீன அதிகாரிகள் கடந்த வியாழன் அன்று அமெரிக்க விமானங்கள் சீனா வர தாங்கள் இட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவெடுத்தனர். இதனையடுத்து அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. சீன விமான போக்குவரத்துத் துறை மீது தங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளதாகவும் சீனா விரும்பினால் அமெரிக்காவில் சீன விமானங்கள் இரு வார காலம் சீனா-அமெரிக்கா நாடுகளுக்கு ரவுண்ட் டிரிப் அடிக்க அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கு எந்தெந்த சீன விமான நிறுவனங்களை அனுமதிக்கலாம் என சீனா தேர்வு செய்து கொள்ளலாம் என அமெரிக்க தெரிவித்தது. இதனால் இருநாடுகளின் விமான சேவையில் பதற்றம் தணித்து ஓர் உடன்படிக்கைக்கு வந்துள்ளன. இந்த சுமூகப் போக்கு மேலும் தொடரவேண்டும் என நடுநிலையாளர்கள் விரும்புகின்றனர்.