சீனாவில் கொரோனா தீவிரம்: குடியிருப்பு பகுதிகளுக்கு ‘சீல்’

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் குடியிருப்பு பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 2019ல் கொரோனா வைரஸ் முதலில் தோன்றி, பின் உலகம் முழுதும் பரவியது. இரண்டு ஆண்டுகளாக உலகமே முடங்கிக் கிடந்தது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின், உலகின் பல்வேறு நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஆனால், கொரோனா உருவான சீனாவில் மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது.

சீனாவில் தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்காவ் நகரில் நேற்று முன் தினம் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இங்கு 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதி களுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் ‘சீல்’வைத்தனர். அங்கு வசிக்கும் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்காவ் நகரில் 5,000 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மதுக்கூடங்கள், சினிமா தியேட்டர்கள், அழகு நிலையங்கள் மற்றும் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவில்லை எனவும் புகார் எழுந்து உள்ளது.தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir