தென் கொரியா எல்லை தாண்டி வந்து தனக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வீசுவதை நிறுத்த தவறினால் அந்நாட்டுடன் 2018ல் செய்து கொண்ட ராணுவ ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜங் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் தென் கொரியா தன் போக்கை கைவிடாவிட்டால் அந்நாட்டில் உள்ள பரஸ்பர ராஜீய உறவுக்கான அலுவலகத்தை மூடப் போவதாக நேற்று வட கொரியா எச்சரித்துள்ளது.