ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டம், உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவ துவங்கியுள்ளது.
அமெரிக்காவில், போலீஸ்காரர் ஒருவர் தன் முழங்காலால் கழுத்தை நெருக்கியதில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் உயிரிழந்தார். இதனால், அமெரிக்க முழுதும், போராட்டம் வெடித்தது. மினியாபொலிஸ் நகரில், மக்கள் வீதிகளில் இறங்கி, இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்தனர். பல கடைகள், சூறையாடப்பட்டன. இதையடுத்து, கலவரக்காரர்கள் மீது, கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், மிளகு பொடி துாவியும், கலவரத்தை அடக்க, போலீசார் முயன்றனர். இதனால், வன்முறை சம்பவங்கள் அதிகமானது.
இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தை கண்டித்து, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளிலும், ஜப்பான் தலைநகர் டோக்கியோ, ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியிலும் போராட்டங்கள் நடந்தன.