கந்தப் பெருமானின் அருள் கொண்டு இவ்வாண்டும் கதிர்காமக் கந்தனின் ஆடிவேல் விழா நடைபெறவுள்ளது.
ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆடிவேல் எசல விழாவைக் குறிக்கும் வகையில் நேற்று காலை முகூர்த்த கால் நடும் சடங்கு சிறப்பாக நடைபெற்றது.
அதன்படி, சுகாதாரத் துறையின் உத்தரவுகளைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு எசலா விழா எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி தொடங்கி, பிரமாண்ட ஊர்வலத்துடன் ஆகஸ்ட் 04 ஆம் திகதியன்று இனிதே நிறைவடையவுள்ளது.