தேர்தல் ஆணைக்குழு மீது சீறிப்பாயும் மஹிந்த அணி

தேர்தல்களை நடத்தவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், இன்னொரு தரப்புக்குச் சாதகமான வகையிலும் தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து வெளியிடுவது மிகவும் மோசமான குற்றமாகும்என மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இது தொடர்பாக அரசமைப்பு பேரவை கூடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறான ஒரு நிலைமை காணப்படும் நாட்டில், ஒருபோதும் சுயாதீனத்தன்மையுடன் தேர்தல் இடம்பெறாது எனவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

About the Author: kalaikkathir