தேவாலயங்களில் திருமண ஆராதனைகள் நடத்த அனுமதி

மேல் மாகாணத்தில் தேவாலயங்களில் திருமண ஆராதனைகள் நடத்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்காக திருமணங்களில் கலந்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையை நூறு பேராக மட்டுப்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கமைய கைகளை கழுவுதல், முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றும் நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடித்து திருமணத்தை நடத்த கொழும்பு பேராயர் அலுவலகம் உறுதியளித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir