நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகளை எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எனவே தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை இன்றைய தினம் முடிவு செய்ய முடியாமல் போகும் என ஜனரான் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தேர்தலை நடத்துவதற்கு தேவையான வழிக்காட்டுதல்களை ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வழிக்காட்டுதல்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தும் தினத்தை அறிவிக்க அனுமதி கிடைத்துள்ளது
இருந்த போதிலும் உலக சுகாதார அமைப்பின் பதிலையும் எதிர்பார்த்துள்ளோம்.
இன்று மதியத்திற்குள் உலக சுகாதார அமைப்பின் பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.