தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 6 இலட்சத்து 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது; பலி எண்ணிக்கை, 36 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் ஏற்படும் வைரஸ் பாதிப்புகள் குறித்த தகவல்களை மக்களிடம் இருந்து மறைக்க, பிரேசில் அரசு முடிவு செய்துள்ளது.
சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இருந்த, வைரஸ் பாதிப்புகள் குறித்த தரவுகள் நீக்கப்பட்டு, வேறு போலி தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கு, சுகாதார வல்லுனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.