அமெரிக்க போர் கப்பல்கள் தைவான் ஜலசந்தியில் முகாம்

தென் சீன கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.தென் கிழக்கு ஆசிய நாடான தைவானை நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடுகிறது; அதை, தன் நாட்டின் ஒரு பகுதியாக அறிவிக்க சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் தைவான், சீனாவின் அத்துமீறல்களை கடுமையாக எதிர்த்து வருகிறது.அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி, சமீபத்தில் தைவானுக்கு வந்து சென்றார். இது, சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தென் சீன கடலில் தைவான் ஜலசந்தியில் சீனா போர் பயிற்சி நடத்தி தைவானை அச்சுறுத்தியது. இதற்கு, அமெரிக்கா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன

.இந்நிலையில், அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் தென் சீனக் கடலில் தைவான் ஜலசந்தியில் முகாமிட்டுள்ளன. இது, சீனாவுக்கு பெரும் ஆத்திரத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தென் சீன கடல் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir