திருடப்பட்ட, சிவப்பு மாணிக்கத்தையா எலிசபத் மகாராணி அணிந்திருந்தார்

எலிசபத் மகாராணியின் தலையில் இருந்த அந்த சிவப்பு மாணிக்கம் பதிக்கப்பட்ட மகுடத்தின் கதை தெரியுமா?
இது இஸ்லாமிய ஸ்பைனில் கிரனாடா இராச்சியத்திலிருந்து திருடப்பட்ட ஒரு அரச மகுடமாகும். விலைமதிக்க முடியாத இந்த மகுடமானது, கிரனாடாவின் பனில்- அஹ்மர் இளவரசர் ஆறாம் முகமது பின் இஸ்மாயில் பாவித்து வந்த மகுடமாகும்.

இஷ்பீலியா அரசன் பெட்ரோதி, அவரை வஞ்சகமாக வரவழைத்து வஞ்சகமாக கொன்று இந்த மகுடத்தை தனதாக்கிக் கொண்டான்.

பின்னர் பெட்ரோவின் சகோதரர்களில் ஒருவன் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த போது அவன் அப்போதைய ஆங்கில இளவரசர் எட்வர்டிடம் உதவி கோரினான்.

அந்த உதவிக்கு கைமாறாக இந்த மகுடம்

கிபி 1367 இல் ஆங்கில அரசனுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அப்போதிலிருந்து, இந்த மகுடம் பிரிட்டிஷ் மன்னர்களின் உடைமைகளுள் ஒன்றாக மாறிவிட்டது. பின்னர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் பிரிட்டிஷ் மன்னர்கள் இதனை அணிவது வழக்கமாக இருந்து வந்தது. பி்ன்னர் எலிசபத் மகாராணியின் தலையை அலங்கரிக்கும் மகுடமாக மாறிவிட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir