பெண்ணின் கண்ணுக்குள் இருந்த 23 லென்ஸ்கள் !!

அமெரிக்காவில் ஒரு பெண்ணின் கண்களுக்குள் இருந்து 23 காண்டாக்ட் லென்ஸ்களை மருத்துவர் ஒருவர் அகற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ஞாபக மறதி யாருக்குத்தான் இல்லை. சில நேரங்களில் வெளியே சென்றுவிட்டு பொருட்கள் வாங்க மறந்து வந்திருப்போம். எங்கே எதை வைத்தோம் என்பதை அடிக்கடி மறப்போம். ஏன் சில நேரங்களில் சாப்பிட கூட மறந்துவிடுவோம். ஆனால் ஒருவர் கண்களுக்குள் லென்ஸ் வைத்திருப்பதை மறந்து மறுநாள் வேறு லென்சை வைப்பார்களா? அப்படியே மறந்தாலும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் அது நடக்குமா? பலநாட்கள் கண்களுக்குள் லென்ஸ் வைத்தை மறந்து கடைசியில் மருத்துவரை அணுகியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர் கத்ரினா குர்தீவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒரு பெண்ணின் கண்களுக்குள் இருந்து அடுக்கடுக்காக அடுத்தடுத்து லென்ஸ்களை வெளியே எடுக்கும் வீடியோ அது. இப்படி 23 லென்ஸ்களை அகற்றியுள்ளார் அந்த மருத்துவர்.

கண்ணுக்குள் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்களை மிகுந்த கவனத்துடன் வெளியே எடுக்கும் புகைப்படங்களையும் கத்ரினா மற்றொரு பதிவில் பகிர்ந்துள்ளார். அதில், ‘’நான் மிகவும் கவனமாக அனைத்து காண்டாக்ட் லென்ஸ்களையும் வெளியே எடுத்தேன். எண்ணிப்பார்த்ததில் அவை மொத்தம் 23 இருந்தது. காண்டாக்ட் லென்ஸ்களைப் பிரிக்க, நான் ஒரு மிக நுண்ணிய அறுவை சிகிச்சை கருவியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அவை ஒருமாதம் கண்னிமைக்கு அடியில் இருந்ததால் நன்றாக ஒட்டியிருந்தன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir