இத்தாலிய மருத்துவ நிபுணர்கள் கொரோனா நோயாளிகள் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
அதில், கொரோனா நோயை வெளிக்காட்டும் மற்றொரு அறிகுறியை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 5 பேரில் ஒருவருக்கு உடலில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக தடித்த சிவந்த நிறம் காணப்பட்டுள்ளது.
இது, தோல் அரிப்பாலோ அல்லது ஒவ்வாமையாலோ ஏற்பட்டதல்ல.
இந்த அறிகுறிகள் தென்பட்ட பிறகே 2, 3 நாட்கள் கழித்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உருவாகி இருக்கிறது.
அவ்வறிகுறி தொடர்பில் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில்,கொரோனா நோயாளிகளின் உடலில் இந்த மாற்றம் திடீரென ஏற்பட்டுள்ளது.
அதற்கு முன்பு அவர்களுக்கு அப்படி ஏற்பட்டதில்லை.
உடலில் தடிப்புகள் உருவான கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகின்றது.
பொதுமக்கள் தங்கள் வீட்டு உறுப்பினர்களிடம் இதுபோன்று ஏற்படும் திடீர் அறிகுறிகளை நன்கு கவனிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.