150 அடி அகல அளவினைக் கொண்ட விண்கல் ஒன்று நாளை 6 ஆம் திகதி பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 5 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதாவும் அவற்றில் இரண்டு கற்கள் பூமிக்கு மிக அருகாமையில் வரவுள்ளதாகவும் தெரியவருகிறது.
குறிப்பாக, 2023 FZ3 என்ற விண்கல் ஏறத்தாழ 42 லட்சம் கிலோ மீற்றர் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளதோடு, இருப்பினும் இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்தில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.