மேற்கு நெதர்லாந்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் ஒருவர் மரணமடைந்ததோடு சுமார் 30 பேர் காயமடைந்து, அவர்களில் சிலர் அவசர சிகிச்சையைப் பெற்றுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தின்போது, சரக்கு ரயில் ஒன்றும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிலர் சம்பவ இடத்தில் சிகிச்சைகளைப் பெற்ற நிலையில், 19 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், சிறிய காயங்களுடன் தப்பிய பயணிகளை அப்பகுதி மக்கள் பராமரித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி 03:25 மணிக்கு குறித்த விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் விபத்தினால், மின் தொடர்புகளும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
T01