உக்ரைனுக்குப் புதிதாக 2.6 பில்லியன் டாலர் அளவிற்கு இராணுவ உதவியை வழங்குவதற்கு அமெரிக்கா தீரமானம் மேற்கொண்டுள்ளது.
குறித்த உதவியானது உக்ரைனின் போர் நடவடிக்கைகளுக்கான உடனடித்தேவையாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. இந்த உதவியானது, ரொக்கெட் அமைப்புகளுக்கான வெடிமருந்து, பீரங்கிக் குண்டுகள், சிறிய ஆயுதங்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் உடனடிப் போர்த் தேவைகள் மற்றும் நீண்ட காலப் பாதுகாப்பு உதவித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமெரிக்காவின் உதவி மேலும் தொடரும் எனவும் பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உதவியின் பெரும்பகுதி உபகரணங்கள் வாங்குவதற்கும், மீதமுள்ள பணம் தற்போதுள்ள அமெரிக்கப் பங்குகளில் இருந்து விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
TO1