இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொருதொகை முட்டைகள் நேற்று முன்தினமிரவு (ஏப்ரல் 04) இலங்கைக்கு வந்துள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் (STC) தெரிவித்துள்ளது.
STC யின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர கருத்துப்படி, இலங்கை இதுவரை மொத்தம் 4 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்துள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முதல் கட்ட 2 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதல் பங்கு மார்ச் 23 அன்று நாட்டை வந்தடைந்திருந்ததாக தெரிகிறது.
அதே நேரத்தில் ஒரு மில்லியன் முட்டைகளை ஏற்றிய இரண்டாவது கப்பல் ஐந்து நாட்களுக்கு முன்பு வந்து சேர்ந்தது. இரண்டாவது தொகுதியானது இப்போது விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
நேற்று முன்தினமிரவு நாட்டை வந்தடைந்த மூன்றாவது முட்டைத் தொகுதியின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும் என்று வாலிசுந்தர கூறியிருந்தார். இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுவதாகவும் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.