சீன அதிபர் ஷி ஜின்பிங் உலகத்தைப் பனிப்போரை நோக்கித் தள்ளுவதாக அமெரிக்காவின் அரசியல் நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி ரஷ்யாவிற்குப் பயணித்த சீன அதிபர் ஷி ஜின்பிங், மூன்று நாட்கள் ரஷ்யாவில் தங்கிப் புடினுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.
போர்க்குற்றங்களுக்காகச் சர்வதேசக் குற்றவாளியான புடினைக் கைது செய்யச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவைத் தெரிவிக்கவே சீன அதிபர் மொஸ்கோ சென்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இந்த நிலையில், தொடர்ந்து இராணுவ ஒத்துழைப்புத் தொடர்பிலும், ஆயுதங்கள் தொடர்பிலும்; ரஷ்யாவும் சீனாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்க வான்வெளிக்குச் சீனா உளவு பலூனை அனுப்பியதைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவுடன் சீனா பனிப்போரில் ஈடுபட்டு வருவதாக அரசியல் நிபுணர்கள் ஷி ஜின்பிங் மீது குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
T01