அமெரிக்காவில் கொரோனாக் கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவுக்கு வந்திருப்பதால் அமெரிக்காவிற்குள் நுழைவதற்காகப் புலம்பெயர்ந்தோர் அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் குழுமிக் காணப்படுகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்காவுக்குத் தஞ்சம் கோரி வரும் விண்ணப்பங்களைத் தடுக்கும் ‘டைடில் 42’ எனப்படும் கொரோனாக் கட்டுப்பாட்டுக் கொள்கை நேற்றுடன் முடிவடைந்திருக்கின்றது.
இந்த நிலையிலேயே, மெக்சிகோவின் டிஜுவானாவில் உள்ள எல்லையில் புலம்பெயர்ந்தவர்கள் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது.
தற்காலிக இருப்பிடங்களை அமைத்து குறித்த எல்லையிலேயே புலம்பெயர்ந்தவர்கள் காத்திருக்கின்றனர்.
இதனால், குறித்த எல்லைப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
T01