உலகின் மிகப்பெரிய ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசன், இந்தியாவில் 500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.
தொழிநுட்பப் பங்குகளின் சரிவைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் உலகளவில், 18,000 பேரைப் பணி நீக்கம் செய்திருந்த குறித்த நிறுவனம், கடந்த மார்ச் மாதமும் 9,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது.
இந்தியாவில் அமேசன் நிறுவனத்தின் வளர்ச்சி, சரிவு நிலையைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அது தற்போது 500 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது.
பணிநீக்க நடவடிக்கைகள் மேலும் தொடரும் எனவும், வலைத்தளச் சேவைகள், மனித வளம் உள்ளிட்ட துறைகளின் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
T01