யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் சரீரப் பிணையில் விடுதலை!

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்  ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக் கிளையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காகச் சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜுலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மோதலுக்கு இலக்காகிக் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன்மீதான தாக்குதலானது, யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டினால் மேற்கொள்ளப்பட்டது எனக் காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply