பாவனையில் இல்லாத Google கணக்குகள் அகற்றப்படும்!

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாவிக்கப்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகளை அகற்றுவதற்கு கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

டிசம்பர் 2022 தொடக்கம், பாவிக்கப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்குவதற்கே கூகுள் முடிவு செய்துள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வகையிலேயே நிறுவனம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது இரண்டு வருடங்களாக Google கணக்கைப் பயன்படுத்தாமலோ அல்லது உள்நுழையாமலோ இருந்தால், கணக்கு அகற்றப்பட்டு, அந்தக் கணக்கோடு தொடர்புடைய Gmail, Docs, Drive, Meet, Calendar, YouTube மற்றும் Google உட்பட அனைத்து Google Workspace உள்ளடக்கமும் நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானமானது, தனிப்பட்ட Google கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் பாடசாலைகள், வங்கிகள், வணிகங்கள் போன்ற நிறுவனங்களுக்குப் பொருந்தாது எனவும் கூகுள் அறிவித்துள்ளது.

கணக்குகளை நீக்குவதற்கு முன்னர், அது தொடர்பான அறிவித்தல் Google இனால் குறித்த பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply