அமேசன் பகுதியில், விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணம் செய்த கொலம்பிய நாட்டைச் சேர்ந்த நான்கு குழந்தைகள், இரண்டு வாரங்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர்.
மே முதலாம் திகதி, செஸ்னா 206 விமானம், அமேசானாஸ் மாகாணத்தில் உள்ள அரராகுவாரா மற்றும் குவேரியார் மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் குவாயாரே ஆகிய நகரங்களுக்கு இடையே பயணித்தபோதே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இயந்திரக் கோளாறு காரணமாகவே அந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானி உட்பட மூவர் விபத்தில் இறந்ததாகவும், அவர்களின் உடல்கள் விமானத்திற்குள் கண்டெடுக்கப்பட்டன என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
13, 9 மற்றும் 4 வயதுடைய நான்கு குழந்தைகளும், 11 மாதக் குழந்தையொன்றும் இந்த விபத்தில் உயிர் தப்பிதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ டுவிட்டரில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
கொலம்பியாவின் காக்வெட்டா மாகாணத்தின் அடர்ந்த காட்டில் இராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அந்தக் குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
எங்கள் இராணுவத்தின் கடினமான தேடலுக்குப் பிறகு, குவாவியரில் விமான விபத்தில் காணாமல் போன நான்கு குழந்தைகளை உயிருடன் கண்டுபிடித்துள்ளோம் என பெட்ரோ தெரிவித்திருந்தார்.
T01