வாட்ஸ்அப்(Whatsapp) பயனர்களின் நலன் கருதி மெட்டா(Meta) நிறுவனம் இன்று புதிய அம்சமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பப்படும் அல்லது எழுத்துப் பிழையுடன் அனுப்பப்படும் தகவல்களை பயனர்கள் 15 நிமிடங்களுக்குள் திருத்தம் செய்வதற்கான முறைமையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வாட்ஸ்அப்பில் (WhatsApp) பயனர்களின் தனி உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாட் லொக் (chat log) என்ற புதிய அம்சத்தை கடந்த வாரம் மெட்டா (meta) நிறுவனம் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்கள் – வாட்ஸ்அப் (WhatsApp) இல் புதிய அம்சம் அறிமுகம்!