உள்நாட்டு மதுபான விற்பனையில் வீழ்ச்சி!

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் உள்நாட்டு மதுபானங்களின் விலை குறையும் என சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

இவ் வருடம் ஜனவரியில் கலால் வரி உயர்த்தப்பட்டதால் இவ் ஆண்டுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கலால் வருவாய் 30 சதவீதம் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கலால் வரி வருமானம் மார்ச் மாதத்தில் 40 வீதத்தால் குறைந்துள்ளது.

எனினும், உள்நாட்டு மதுபானங்களின் விலையை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வழமையான உள்நாட்டு மதுபான விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆயினும் இந் நிலையில், நுகர்வோர் சட்டவிரோத மதுபானங்களை நாடுவதாகவும் அதனால் அரசாங்கத்தின் வருமானம் குறைந்து மக்களின் சுகாதார நிலையும் மோசமடைவதாகவும் நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply