எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் முதல் அதிகரிப்பு

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டில் (QR) தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் எரிபொருள் விலைத் திருத்தத்தைத் தொடர்ந்து தற்போது நடைமுறையில் உள்ள ஒதுக்கீடானது அனைத்து வாகனங்களுக்கும் அதிகரிக்கப்படும், என காஞ்சன தெரிவித்துள்ளார்.

நேற்று, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) சந்தைப்படுத்தல், நிதி மற்றும் வர்த்தகப் பிரிவுகளுடன் நடைபெற்ற கூட்டத்தின்போதே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எரிபொருள் ஒதுக்கீடு திருத்தப்பட்டு, முச்சக்கரவண்டிகளுக்கான ஒதுக்கீடு 5 லீற்றரிலிருந்து 8 லீற்றராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான ஒதுக்கீடு 4 லீற்றரிலிருந்து 7 லீற்றராகவும், பஸ்களுக்கான ஒதுக்கீடு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், கார்களுக்கான ஒதுக்கீடு 20 லிட்டரிலிருந்து 30 லீற்றராகவும், தரை வாகனங்களுக்கான ஒதுக்கீடு 15 லீற்றரிலிருந்து 25 லீற்றராகவும் லொரிகளுக்கான ஒதுக்கீடு 50 லீற்றரிலிருந்து முதல் 75 லீற்றராகவும், குவாட்ரிக் சைக்கிள்களுக்கான ஒதுக்கீடு 4 லீற்றரிலிருந்து 6 லீற்றராகவும், சிறப்பு நோக்கத்திற்கான வாகனங்களுக்கான ஒதுக்கீடு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், வான்களுக்கான ஒதுக்கீடு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும் உயர்த்தப்பட்டன.

மேற்குறிப்பிட்ட ஒதுக்கீட்டை கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி, அவற்றின் முன்னைய தொகைக்கு மாற்றத் திட்டமிட்டிருந்தாலும், பின்னர் அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டை அவ்வாறே நடைமுறைப்படுத்த அமைச்சகம் முடிவு செய்தது.

இந்நிலையிலேயே, ஜூன் மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply