கிழக்கில் விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டம்

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டு வந்ததையடுத்து விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தாகத் தெரிவிக்கப்படுகிறது.

இக்கலந்துறையாடலில் கிழக்கு மாகாணப் பிரதம செயலாளர், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், விமானப் போக்குவரத்துப் பணிப்பாளர், சுற்றுலாப. பணியகம், விமானப்படை, Cinnamon Air, Fits Air மற்றும் ஏனைய தனியார் சேவையாளர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், Cinnamon Air  தனது விமானச் சேவையை ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிப்பதாக உறுதியளித்தது. அதை ஊக்குவிக்க கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவை அளிப்பதாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply