உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.71 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை 71.48 டொலராகவும் குறைந்துள்ளது.
இதற்கமைய, கச்சா எண்ணெய் விலை சுமார் 2% குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அமெரிக்காவின் கடன் எல்லை குறித்த சர்ச்சை தீர்ந்தமை இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.