போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் மேற்பார்வையில் பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
பொசன் பௌர்ணமி தினத்தன்று மிஹிந்தல, அனுராதபுரம் மற்றும் தந்திரிமலைக்கு வருகை தரும் யாத்திரீகர்களுக்காக விசேட போக்குவரத்துத் திட்டத்தைத் தயாரிக்குமாறு இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகாரிகளுக்கு அமைச்சர் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, அனுராதபுரம் டிப்போவில் இருந்து 85 பேருந்துகளும், பொலன்னறுவை டிப்போவில் இருந்து 125 பேருந்துகளும், ஹொரவப்பத்தானை டிப்போவில் இருந்து 45 பேருந்துகளும், கெக்கிராவ டிப்போவில் இருந்து 35 பேருந்துகளும், கெபிட்டிகொல்லாவ டிப்போவில் இருந்து 32 பேருந்துகளும், தம்புள்ள டிப்போவில் இருந்து 50 பேருந்துகளும் ரஜத பிரதேசத்தில் பக்தர்களின் வசதிக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு 60 பேருந்துகளும், கண்டியில் இருந்து அனுராதபுரத்திற்கு 20 சிறப்புப் பேருந்துகளும், குருநாகலிலிருந்து அனுராதபுரத்திற்கு 50 பேருந்துகளும் இந்த ஆண்டு அனுராதபுரம் பொசன் புனித யாத்திரைக்காகச் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
T02