இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தனது பதவியை இராஜினாமா செய்ததாக, ஐக்கிய மக்கள் சக்தி, போலி ஆவணத்தை தயாரித்துள்ளதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தான் இராஜினாமா செய்ததாக போலி ஆவணம் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியால், தயாரிக்கப்பட்டு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
தனது இராஜினாமாவை சுட்டிக்காட்டும் இந்த போலி ஆவணம் மாவட்ட நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதில் இரண்டு சட்டத்தரணிகளும் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது போன்ற ஒரு கடிதத்தை தாம் ஒருபோதும் சமர்ப்பிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் கூறியதுடன், துணை செயலாளர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்யவில்லை, அப்படி இருந்தால் முதலில் தன்னை செயற்குழுவில் இருந்து நீக்க வேண்டும், எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என தெரிவித்த டயானா கமகே, இந்த போலிச் செயல் குறித்து காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
T02