கொழும்பு போர்ட் சிட்டியில் சர்வதேச பல்கலைக்கழகம்!

கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) மருத்துவ பீடத்துடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு டெண்டர் கோரியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மருத்துவ பீடம் தவிர, பொறியியல், வணிக மேலாண்மை, நிதி மற்றும் வங்கி தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் படிப்புகள் தொடங்குவதும் கொழும்பை பிராந்திய கல்வி நிலையமாக மாற்றும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கான வசதிகளை வழங்குவதும் இப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் போன்று இது சர்வதேச தரத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இப் பல்கலைக்கழகம் ஆறு மாதங்களுக்குள் நிறுவப்பட உள்ளதோடு டிப்ளோமா, பட்டம் மற்றும் முதுகலை படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply