தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அரசின் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அவரது வீட்டில் வைத்து விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் அவரை விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்ல அதிகாரிகள் முயன்றதாக கூறப்படுகிறது.
இதன்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் கதறி துடித்த நிலையில் ஒரத்தூர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செந்தில்பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் மருத்துவமனைக்குச் அவருக்கு மருத்துவர்கள் வழங்கி வரும் சிகிச்சை குறித்து விசாரித்து உள்ளதாகவும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.