ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரும் அவரது உதவியாளரும் பிலிப்பைன்ஸ் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பானது பிலிப்பைன்ஸில் அபு சயாப் என்ற பெயரில் இயங்கி வருகின்றது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்பை நாட்டை விட்டு துரத்தியடிப்பதற்கான முயற்சிகளில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.
இதனையடுத்து, ஐ.எஸ்.பயங்கரவாத குழு தலைவரான பஹாருதின் பெனிட்டோ ஹட்ஜி சதார்,தென்கிழக்கு ஆசியாவில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து குறித்த பகுதியைச் சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதையடுத்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரும், அவரது உதவியாளரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.