இன்று முதல் ஒரு மூட்டை யூரியா உரம் 9,000 ரூபாய்க்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
யூரியா உர மூட்டையின் தற்போதைய விலை ரூ. 10,000 ஆகக் காணப்படுகின்றது.
அண்மைக்காலமாக இலங்கை ரூபாவின் பெறுமதி மற்றும் செலவீனங்கள் குறைக்கப்பட்டமையே விவசாயிகளுக்கு இந்த நன்மையை வழங்குவதற்கு வழிவகுத்துள்ளதாக அமரவீர தெரிவித்தார்.
இந்த பருவத்தில் விவசாயிகளுக்கு பொஸ்பேற் உரம் (TSP) இலவசமாக வழங்கப்பட்டதைசு் சுட்டிக்காட்டிய அவர், பொட்டாசிய (MOP) உரத்தின் விலை 4,500 ரூபாவாகக் காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சில அதிகாரிகளின் கவனக்குறைவால் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைக்கவில்லை என்று கூறிய அவர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு உரிய முறையில் சேவையாற்றாத அதிகாரிகள் எந்த தரத்தில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.