ஹட்டன் பொகவந்தலாவை சேர்ந்த இரட்டையர்களான விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையிலான 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்தே சென்று சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதேவேளை, இதற்கு முன்னர் இவர்கள் யாழில் இருந்து காலி வரையிலான 566 கிலோ மீற்றர் தூரத்தை நான்கு நாட்கள் நடந்தும், புத்தளத்தில் இருந்து சீதுவை வரையிலான 147 கிலோ மீற்றர் தூரத்தினை வெறுமனே ஆறு மணி நேரத்திலும் நடந்து சாதனை படைத்துள்ளதுடன், கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோ மீற்றர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சாதனை படைத்திருந்தனர்.
மேலும், இந்த இரட்டையரில் தயாபரன் ஒரு நடனக்கலைஞர் என்பதும், அவர் தமிழகத்தின் பிரபல நடிகரான ராகவா லோரன்ஸிடம் நடனம் கற்றவர் என்பதும், அவர் முன்னதாக இலங்கையில் தொடர்ச்சியாக 10 நாட்கள் இடைவிடாமல் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.