கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் சந்தையில் பொருட்களின் விலைகள் துாிதமாக அதிகரித்துள்ளது.
உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பருப்பு ஒரு ஒலோ கிராமின் விலை மேலும் 30 ரூபாவால் அதிகரிக்கும் என வியாபாரிகள் தொிவிக்கின்றனா். டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், டொலரின் பெறுமதி குறையும் போது பொருட்களின் விலை என்றும் குறைந்தது இல்லை எனவும் டொலாின் பெறுமதி அதிகரிக்கும் அடுத்த நாளே பொருட்களின் விலை அதிகரிக்கின்றது எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.