கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதா! வெளியான தகவல்

சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையால் சந்தைகளில் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

எவ்வாறாயினும், கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் டொலரின் பெறுமதிக்கு அமைய கோதுமை மாவின் விலை தீர்மானிக்கப்பட மாட்டாது என நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, பெரும்பாலான வெதுப்பகங்கள் அதிக விலைக்கே தொடர்ந்தும் பொருட்களை வழங்குவதாக உணவக உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply