வடக்கு மேற்குக் கரையில் உள்ள ஜெனின் முகாம் மீது இஸ்ரேலிய இராணுவம் பாரிய இராணுவத் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
விமானத் தாக்குதல்களுடன் தொடங்கிய குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய காட்சிகள் சமூக ஊடகங்களில் காணொளிகளாக வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த தாக்குதலில், இதுவரையில் ஏறக்குறைய மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 12 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், ஜெனின் பகுதியில் உள்ள முகாமைத் தாக்கியதாகவும், ஜெனின் முகாமை மறைவிடமாகப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் போது நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
மேலும் ஜெனின் முகாமை அவர்கள் பயங்கரவாத கோட்டை எனவும் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, எதிர் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஆயுதம் ஏந்திய, முகமூடி அணிந்த பாலஸ்தீனியர்கள் முகாமின் எல்லையினுள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த மாதம், இஸ்ரேலிய இராணுவம் ஜெனின் முகாம் மீது நடத்திய தாக்குதலில் ஏறக்குறைய ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு, ஏழு இஸ்ரேலிய வீரர்களும் எல்லைப் பொலிஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.