லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக LITRO லங்காவின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை  2,982 ரூபாவாகக் காணப்படுகின்றது.

5 கிலோ எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.1,198 ரூபாவாகக் காணப்படுகின்றது.

2.3 கிலோ எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.561 ரூபாவாகக் காணப்படுகின்றது.

உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்தமையும் லிட்ரோ எரிவாயு பெருமளவு கையிருப்பு பெறப்பட்டமையுமே இந்த பாரிய விலை குறைப்புக்கான காரணம் என முதித பீரிஸ் தெரிவித்தார்.

நிதியமைச்சு, நுகர்வோர் விவகார அதிகாரசபை, ஜனாதிபதி செயலகம் மற்றும் லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளை அடுத்தும், தற்போதுள்ள எரிவாயு விலை சூத்திரத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட அம்சங்களைத் தொடர்ந்தும் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply