டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலியை வடிவமைக்கும் மெட்டா

டுவிட்டர் செயலிக்கு போட்டியாக மெட்டா “திரெட்ஸ்” என்ற பெயரில் புதிய செயலியை நாளை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல ஆண்டுகளாக டுவிட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டிலிருந்த நிலையில், பிரத்யேக சேவைகளுக்கான சந்தா கட்டணம், அங்கீகரிக்கப்பட்டாத பயனர்கள் நாளொன்றுக்கு 1,000 பதிவுகள் மட்டும் பார்க்க முடியுமென அண்மையில் எலன் மஸ்க் கட்டுப்பாடுகள் விதித்தமையானது டுவிட்டர் பாவனையாளர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது.

டுவிட்டருக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட  புளூஸ்கை, மாஸ்டோடான் போன்ற தளங்களைப் போன்றே, திரெட்ஸின் சேவையும் பரவலான சமூக வலைதளமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

திரெட்ஸின் சேவை, தோற்றத்தில் இன்ஸ்டாகிராம் போன்றும், பயன்பாடுகள் அனைத்தும் டடுவிட்டர் போன்றும் காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த செயலி இன்ஸ்டாகிராம் கணக்கு விவரங்களை கொண்டு தானாகவே ப்ரோபைலை உருவாக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply