சஜித்தின் தந்தையே 5000 துப்பாக்கிகள் தந்து, 5000 கிரனேட்டுகளும் தந்து ஒரு கோடி தோட்டாக்களும் தந்து, 25 கோடிக்கு மேல் பணமும் தந்து விடுதலைப்புலிகளை வளர்த்தது விட்டவர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
பிள்ளையானை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியில் உழைத்தவர்களை வேட்பாளராக நியமித்திருந்தால் அக்கட்சியில் பிள்ளையான் வெற்றி பெற்றிருப்பார் எனவும் முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் களுவாஞ்சிகுடியில் நேற்று நடைபெற்றது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் த.வரதராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை வேட்பாளர் திருமதி வித்தியாபதி முரளிதரன், கட்சியின் செயலாளரும் வேட்பாளருமான வி.கமலதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கட்சியின் வேட்பாளர்கள் உரையாற்றியதுடன் இந்த கூட்டத்தில் பெருமளவான ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அண்மையில் 30 வினாடி காணொளி அணுகுண்டு வெடித்தது போன்று இருந்தது. எங்கும் கருணா அம்மானின் செய்தியே காணப்பட்டது. நான் அங்கு ஒரு மணித்தியாலமாக பேசினேன். பொதுவாக யுத்ததில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் பேசினேன். மீண்டும் ஒரு இழப்பு தேவையில்லையென்று பேசினேன். அதனை சஜித் பிரேமதாச எடிட்டிங் செய்து அவரே வெளியிட்டார். அவரின் தலையில் அவரே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டார்.
சஜித்தின் தந்தையே 5000 துப்பாக்கிகள் தந்து, 5000 கிரனேட்டுகளும் தந்து ஒரு கோடி தோட்டாக்களும் தந்து, 25 கோடிக்கு மேல் பணமும் தந்து விடுதலைப்புலிகளை வளர்த்தது உங்கள் தந்தையென்று அவரிடம் கூறியுள்ளேன். இன்று சிங்கள மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை சஜித்திற்கு ஏற்பட்டுள்ளது. என்னை சுரண்டினால் பிரச்சினை அவருக்குத்தான் என்பது அவருக்கு விளங்கிவிட்டது.
அதற்குத்தான் பிரதமர் கூறினார். கருணா கருணா என்று கத்தாமல் வாயை பொத்திட்டு இருங்கள் என்று கூறிவிட்டார் பிரதமர்.
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மட்டக்களப்புக்கு வரும்போது இங்குள்ள மக்கள் அவருக்கு ஈக்கு கட்டினால் அடிக்கவேண்டும். இவர்தான் சொல்லின் செல்வன் என மட்டக்களப்பு மக்களால் போற்றப்பட்ட இராஜதுரை எம்பியை வடக்கில் துரத்தியடித்தவராகும்.
அம்பாறை மாவட்டத்தில் கோடிஸ்வரன் காடு முழுவதையும் அழித்துவிட்டார். கஞ்சிகுடிச்சாறு பகுதியில் கள்ளமரம் ஏத்தி அளித்துவிட்டார். மண் விற்பனை செய்ற, ஒப்பந்த வேலைகளை செய்கின்றவர்கள் அங்கு தேவையில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கியதே நான்தான். யுத்தம் நடக்கின்றது இந்த யுத்தம் வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். யுத்தத்தின் இழப்புகள் பாதிப்புகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம் எனக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனை நான் தலைவரிடம் சென்று கூறினேன். நான் சுடச் சொன்னவர்களையெல்லாம் என்னிடம் கொண்டு வருகின்றாயா என்று என்னிடம் கேட்டார் என தெரிவித்துள்ளார் .