டுவிட்டருக்கு போட்டியாக தற்போது முகப்புத்தகத்தின் தாய் நிறுவனமான மெட்டா திரெட்ஸ் எனும் புதிய செயலியை கடந்த புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
தற்போது திரெட்ஸ் பயனாளிகளின் எண்ணிக்கை 30 மில்லியனைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், த்ரெட்களின் செயற்பாடுகள் டுவிட்டரைப் போலவே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் த்ரெட் செயலி மீது டுவிட்டர் நிறுவனம் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.