கட்டுப்பாட்டு விலையை மீறி விற்கப்படும் முட்டைகள் !

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலும், முட்டைகள் அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுவதாக உள்ளூர் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை முட்டை 44 ரூபாவுக்கும் சிவப்பு முட்டை 48 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கு வர்த்தக அமைச்சு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நேற்று வரை சில கடைகளில் முட்டை 60 ரூபாவுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் குறிப்பிட்டுள்ளனர்.

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விதித்ததையடுத்து, சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .

எனவே, தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரிகளுக்கு மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் மீண்டும் முட்டைகள் அதிக விலையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பல மாதங்களாக கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளமையினால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply