2003ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஆயுதங்கள் கொண்டுசென்றதாக சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று கருத்து தெரிவித்த அவர்,
14-03-2003 திகதி கல்லடி பாலத்தில் உள்ள சோதனைச்சாவடியில் பிக்கப் வாகனம் ஒன்றை படையினர் சோதனையிட்டபோது அதில் இருந்து நாக்கு கைக்குண்டுகளும் 100 தோட்டர்களும் மீட்கப்பட்டிருந்தன.
அன்றைய காலப்பகுதி சமாதான உடன்படிக்கை காலப்பகுதி என்ற காரணத்தினால் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்த இந்த வாகனம் சோனையிட முற்பட்டவேளையில் அதங்கு விடுதலைப்புலி உறுப்பினர்கள் சோதனை செய்ய மறுப்பு தெரிவித்த நிலையில் சர்வதேச கண்காணிப்புக்குழு முன்னிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் குறித்த வாகனம் சோதனை செய்யப்பட்டது.
இது தொடர்பில் அதில் பயணித்த எட்டு விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஆயுதங்களுடன் பயணித்த குற்றசாட்டுக்காக பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு மேன் முறையீட்டு நீதிமன்றில் செய்யப்பட்ட பிணை மனுவின் அடிப்படையில் 2004ஆம் ஆண்டு குறித்த எட்டுப்பேரும் பிணையில் விடுக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான விழக்கு மட்டக்களப்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் 2006ஆம் ஆண்டு தொடக்கம் நடாத்தப்பட்டுவந்தது.இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள்,இராணுவத்தினர்,அரசபகுப்பாய்வு திணைக்களம் ஆகியவற்றின் அரச தரப்பு சாட்சியங்கள் பெறப்பட்டு எதிர்த்தரப்பு சாட்சியங்களும் பெறப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சந்தேக நபர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.
குறித்த வழக்கின் எதிரிகளின் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எதிரிகளின் பிரத்தியேக உடமைகளில் குறித்த ஆயுதங்கள் இருக்காத நிலையிலும் ஆள் அடையாளம் தொடர்பில் அரசதரப்பில் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் உறுதிப்படுத்த தவறியதால் மே;முறையிட்டு நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லாவினால் கடந்த 22-06-2020 சகல எதிரிகளும் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்தார்.