நைஜீரியருக்கு மரண தண்டனை விதித்தது கொழும்பு உயர் நீதிமன்றம்

கொக்கைன் போதைப்பொருளை வைத்திருந்த நைஜீரிய பிரஜைக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததுடன், கடந்த 2020 ஆம் ஆண்டு 45.6 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களுக்குத் தலா பத்து வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

45 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்தியதற்காக இரண்டு ஈரானியர்கள் மற்றும் ஐந்து பாகிஸ்தானியர்களை 2020 ஏப்ரல் 10 அன்று இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக கடந்த வருடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், கொழும்பு மேல் நீதிமன்றினால் ஜூன் 26 ஆம் திகதி 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், 1.74 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளை வைத்திருந்த போது, 2016 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply