பிரான்ஸ் கடற்படை கப்பலான லோரைன் இன்று காலை சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
142.20 மீற்றர் நீளமுடைய இந்தக் கப்பல் 154 பணியாளர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு வான்-பாதுகாப்பு பல்நோக்கு போர்க்கப்பல் ஆகும்.
இதற்கிடையில், கப்பலின் கட்டளை அதிகாரி இன்று மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்தார்.
அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த கப்பல், ஜூலை 15 ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளது. கப்பல் புறப்படும்போது கொழும்பிலிருந்து இலங்கை கடற்படையின் கப்பலுடன் ஒரு கடவுப் பயிற்சியை நடத்தும் என கடற்படை தெரிவித்துள்ளது.