நாட்டில் இரண்டாவது சுற்று கொவிட் 19 ஆபத்தினை தவிர்ப்பதற்கு அரசாங்கம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அரச மருத்துவஅதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது சுற்று தொற்று குறித்து ஏற்கனவே அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவின் உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொழம்பகே தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவது அலட்சியம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 நெருக்கடி முடிவிற்கு வருகின்றது போல தோன்றினாலும்,இரண்டாவது சுற்று ஆபத்திற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக காணப்படுவதாக ,உலக சுகாதார ஸ்தாபனமும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் வைத்தியர் கொலம்பகே தெரிவித்துள்ளார்.